6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எங்கும் அறிவியல்; யாவும் கணிதம் வானவில் மன்ற மாணவர் பயிற்சி முகாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 20, 2023

6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எங்கும் அறிவியல்; யாவும் கணிதம் வானவில் மன்ற மாணவர் பயிற்சி முகாம்

6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எங்கும் அறிவியல்; யாவும் கணிதம் வானவில் மன்ற மாணவர் பயிற்சி முகாம்

எங்கும் அறிவியல்; யாவும் கணிதம் வானவில் மன்ற மாணவர் பயிற்சி முகாம்.

செய்தியாளர் அழைப்பு - நாள்: 20/03/2023

6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்த வானவில் மன்றம் துவக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட 710 கருத்தாளர்கள் 38 மாவட்டங்களில் உள்ள 13,200 அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றச் செயல்பாடுகளில் ஆசிரியர்களுக்கு உதவி வருகின்றனர். 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 20 லட்சம் மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்களின் துணையுடன் எளிய அறிவியல் கருவிகள் மூலம் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டு வருகின்றனர், மார்ச் 20 முதல் மார்ச் 25 வரை பயிலரங்கில் மாணவர்கள் பிர்லா கோளரங்கம், ஐ.ஐ.டி(மெட்ராஸ்), IMSc, வண்டலூர் உயிரியல் பூங்கா, ISRO ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் கணிதவியலாளர்களுடன் உரையாடுவார்கள். மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித மாதிரி தயாரிப்பு போட்டியில் ஈடுபடுவார்கள் மாணவர்களின் அறிவியல் கண்காட்சியும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

வானவில் மன்ற மாணவர் பயிலரங்கம் 20-03-23 திங்கட் கிழமை அன்று மாலை 5 மணிக்கு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைக்கிறார்.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி. காகர்லா உஷா இ.ஆ.ப அவர்கள் உட்பட நடைபெறுகிறது அரசு அலுவலர்கள் முன்னிலையில் இந்நிகழ்விற்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.