அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு 31.03.2023 -க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 26, 2023

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு 31.03.2023 -க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு 31.03.2023 -க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு 31.03.2023 -க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 31.03.2023-ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கீழ்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களுக்கான இணையவழிதேர்வு 20.05.2023 அன்று நடத்தப்படும். டிசம்பர் 26, 2002 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜூன் 26, 2006 அல்லது அதற்குமுன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பில்

உடல் தகுதியை பொறுத்தவரைஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது மூன்று முறைகளை கொண்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50,000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.03.2023 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04343-291983 என்ற தொலைப்பேசி எண் வாயிலாக தொடர்பு கொள்வதோடு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். ஆட்சித்தலைவர்

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கிருஷ்ணகிரி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.