New Tax vs Old Tax Slab:புதிய வரி முறைக்கும், பழைய வரிமுறைக்கும் என்ன வித்தியாசம்.. மத்திய அரசின் பட்ஜெட்டில் யாருக்கு லாபம்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 1, 2023

New Tax vs Old Tax Slab:புதிய வரி முறைக்கும், பழைய வரிமுறைக்கும் என்ன வித்தியாசம்.. மத்திய அரசின் பட்ஜெட்டில் யாருக்கு லாபம்?

New Tax vs Old Tax Slab:புதிய வரி முறைக்கும், பழைய வரிமுறைக்கும் என்ன வித்தியாசம்.. மத்திய அரசின் பட்ஜெட்டில் யாருக்கு லாபம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் தொடர்ந்து நான்காவது முறையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, பொதுமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிவிப்பை, நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

புதிய வருமான வரிதிட்டம்:

அப்போது, நாட்டில் புதிய வருமான வரி திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. புதிய வருமான வரி திட்டம் அறிமுகப்படுத்தப்பாட்டாலும்,  பழைய வருமான வரி திட்டத்தின் மூலமான சலுகைகளையும் தனிநபர்கள்  பெற முடியும். அதேநேரம், நிறுவனங்கள் சார்ந்த கணக்குகளுக்கு புதிய வருமான வரிதிட்டம் என்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய வருமான வரி திட்டத்தில் 6 பிரிவுகளாக இருந்த வரிவிதிப்பு முறை, புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தில் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம்:

புதிய வருமான வரி திட்டம் மூலம், தனிநபர் ஒருவர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்தை வருவாயாக கொண்டிருந்தால், அவர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.2.5 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அது 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வரிவிதிப்பு முறை:

அதைதொடர்ந்து, ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருவாயாக கொண்டு இருப்பவர்கள் 5 சதவிகிதம் வரியும், ரு. 6 முதல் 9 லட்சம் வரையிலான வருவாய் கொண்டிருப்பவர்கள் 10 சதவிகிதம் வரியும் செலுத்த வேண்டும். ரூ.9 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருவாயை கொண்டவர்கள் 15 சதவிகித வரியும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாயை கொண்டவர்கள்  20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும். ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்டவர்கள்,  30% வரியை செலுத்த வேண்டும். 

ரூ.7 லட்சம் வரையில் வரி விலக்கு

பழைய வருமான வரி விதிப்பு திட்டத்தின் மூலம், ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்கள், உரிய ஆவணங்களை செலுத்துவதன் மூலம் முழு வரி விலக்கு பெறுகின்றனர். இந்நிலையில், புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில், ரூ.7 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்களும்,  முழு வரி விலக்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தனிநபர் வருமான வரி மத்திய பட்ஜெட்டின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கான புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது இருப்பினும் புதிய வருமான வரி முறையை விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது புதிய வரி முறையில் அதிக வரி அடுக்குகளை நடைமுறைப்படுத்தி குறைந்த வரி விகிதங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது இருப்பினும் பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் டேக்ஸ் டிடக்‌ஷன் எனப்படும் வரிக் கழிப்பு விலக்குகள் புதிய வரிமுறையில் இருந்து நீக்கப்பட்டன பழைய வரி முறையில் வரிப் பொறுப்பைக் குறைக்க வீட்டு வாடகை கொடுப்பனவு எனப்படும் HRA லீவ் டிராவல் அலவன்ஸ் கல்விக் கட்டணம் மருத்துவக் கட்டணம் காப்பீட்டுத் தொகைகள் போன்ற விலக்குகள் இருந்தன இதன் மூலம் வரி செலுத்துபவர் பல்வேறு வகைகளில் முதலீடு செய்தோ சேமிப்பு மூலமாகவோ அல்லது செலவு செய்வதன் மூலமோ தங்கள் வரித் தொகையை குறைத்து மதிப்பிட்டு வந்தனர் அதேநேரம் புதிய வரி முறையில் கல்விக்கட்டணம் மருத்துவகட்டணம் காப்பீட்டுத்தொகை வீட்டுக்கடன் போன்ற சலுகைகள் கிடையாது இது நடுத்தர மற்றும் மாத சம்பளதாரர்களுக்கு பெரும் அதிருப்தியாக இருந்தது அதேநேரம் வரிக் கழிப்பில் Tax Deduction மிகப்பெரிய பிரிவு 80C பிரிவாகும்இதன் மூலம் வரி செலுத்துவோர் தங்களின் வரிக்குரிய வருமானத்தை ஒன்றரை லட்ச ரூபாய் வரை குறைக்க முடியும் இது தவிர வீடு அல்லது கல்விக் கடன்களுக்கான வட்டி சுகாதார காப்பீட்டிற்கு செலுத்தும் பிரீமியங்கள் முதிலியன விஷயங்களில் வரி விலக்குகளைப் பெற முடியும் மேலும் புதிய வரிமுறையில் 6 அடுக்குகளாக இருந்த வருமான வரிமுறையை 5 அடுக்குகளாக குறைத்து பல்வேறு வரிச் சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.