3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்

3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்

நாமக்கல்லில் ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில், மாவட்ட அளவிலான மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன்; தலைமை வகித்தார். மாவட்ட ஒருங் கிணைப்பாளர் அருள் செல்வன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் ராஜேந்திரபிர சாத், நல்லகுமார், சங்கர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். மாநில ஒருங்கி ணைப்பாளர் ரக்ஷித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில், தமிழக அர சின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியி டங்களை நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும். 3,500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளு டன் இணைக்கும் முடி வையும், 3,500 சத்துணவு மையங்களை மூடுவதை யும் கைவிட வேண்டும். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு. அரசுப்பணியில் சேர்ந்தவர் களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண் டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.