ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு தேர்வில் திடீர் மாற்றம் எழுத்து தேர்வு முடிந்த பின்பே உடற்தகுதி தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு தேர்வில் திடீர் மாற்றம் எழுத்து தேர்வு முடிந்த பின்பே உடற்தகுதி தேர்வு

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு தேர்வில் திடீர் மாற்றம் எழுத்து தேர்வு முடிந்த பின்பே உடற்தகுதி தேர்வு

இந்திய ராணுவ ஆள் சேர்ப்புப் பிரிவு இயக்குநர் கர்னல் எம்.கே.பத்ரே சென்னை ேகாட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்புப் பணியில் இதுவரை முதலில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது www.joinindianarmy.nic.in என்ற ராணுவ சேர்க்கைக்கான இணையதளம் மூலம் (6 பிரிவு அக்னி வீரர்) பணிக்கு விண்ணப்பித்துள்ள ஆண் மற்றும் பெண்கள், முதலில் எழுத்துத் தேர்வை எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதில் தேர்ச்சி பெறுவோர் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ராணுவத்தில் சேர்வதற்காக பெயர்ப் பதிவு செய்வதற்கு கடந்த 16ம் தேதியில் இருந்து அடுத்த மார்ச் 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு, ஆன்லைன் மூலம் ஏப்ரல் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும். இதற்காக இந்தியா முழுவதும் 176 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது கம்ப்யூட்டர் மூலம் நடக்கும் தேர்வாகும். அவற்றில் 5 இடங்களை விண்ணப்பதாரர் தேர்வு செய்யலாம். ஆன்லைன் தேர்வுக்காக விண்ணப்பதாரர் ரூ.250 செலுத்த வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு, எழுத்துத் தேர்வு ஆரம்பிப்பதற்கு 10 முதல் 14 நாட்களுக்கு முன்பே ராணுவ இணையதளத்தில் அனுமதி அட்டை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உடல் தகுதி தேர்வுக்காக குறிப்பிட்ட இடங்களுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர் இறுதி நிலைக்கு தகுதி பெறுவார். மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, www.joinindianarmy.nic.in என்ற ராணுவ இணையதளத்தில் இணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 7996157222 ராணுவஎண்ணிலும் தெளிவு பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.