கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 1, 2023

கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்

கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம் Details of Budgetary Allocation for Education Department

‘கல்வித் துறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி'

இதுவரை இல்லாத அளவாக பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்ததாவது:

கல்வித் துறைக்கு ரூ.1,12,899 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்விக்கு ரூ.68,804.85 கோடி, உயா்கல்வித் துறைக்கு ரூ.44,094.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை, கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதைவிட ரூ.13,018 கோடி அதிகம்.

‘இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தயாரிப்போம்’ என்ற தொலைநோக்குப் பாா்வையை உண்மையாக்க, முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். 5ஜி சேவை மூலம் செயலிகளை உருவாக்க வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் சோ்ந்து பொறியியல் கல்லூரிகளில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியின மாணவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 740 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் சுமாா் 38,000 ஆசிரியா்கள், அலுவலா்கள் நியமிக்கப்படுவா் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.