4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம் : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 15, 2023

4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம் : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமையாசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குடி பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த பிலிபட்டி நடுநிலை பள்ளியில் 83 மாணவிகள் பயின்று வருகின்றனர். 8-ம் வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் பலர் கால்பந்து போட்டிக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். நேற்று மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். தொடர்ந்து மாநில அளவில் போட்டியில் கலந்துகொள்ளவதற்காக கரூர் மாவட்டம் தொட்டியதில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதாற்காக நேற்று மாலை 3 மணிக்கு 13 மாணவிகளை அழைத்துக்கொண்டு ஜெபசாய இப்ராஹிம் என்ற இடைநிலை ஆசிரியர், ஆசிரியை திலகவதி அழைத்து சென்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். 2-வது சுற்று போட்டிக்கு இடைவெளி இருந்த காரணத்தால் 13 மாணவிகளும் அருகில் உள்ள ஆற்றில் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.

அப்போது ஆற்றில் இறங்கிய ஒரு மாணவி ஆற்றில் சிக்கிக்கொண்ட நிலையில், அவரை காப்பாற்ற சென்ற மற்ற 3 மாணவிகள் ஆற்றில் சிக்கிகொண்டனர். மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா, ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

மாணவிகளை போட்டிக்கு அழைத்து சென்று கவனக்குறைவாக நடந்துகொண்ட காரணத்தால் பள்ளியின் தலைமையாசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம் : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Karur Mayanur Cauvery river 4 School Student Dead | தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் பரிதபமாக உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக இன்று உடற்கல்வி ஆசிரியருடன் வந்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவிகள் பின்னர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா உள்ளிட்ட 4 மாணவிகள் நீரில் பரிதபமாக உயிரிழந்தனர் இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு 4 மாணவிகளின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து கொள்வதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.