பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 15, 2023

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! 10th Class Public Examination Name List Available to Download from 17.02.2023 Afternoon - Directorate of State Examinations Notification!


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - ஏப்ரல் 2023 - பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

1. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள், நாள்:08.12.2022.

2. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட கடிதங்கள், நாள்.23.12.2022 மற்றும் 06.01.2023 பார்வை:

பார்வை 1-ல் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், ஏப்ரல் 2023. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு. அனைத்து உயர்நிலை 1 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் 14.12.2022 முதல் 23.12.2022 வரையிலான நாட்களில் தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணாக்கர்களது விவரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர்.

பார்வை 2-ல் காணும் இவ்வலுவலகக் கடிதங்களில் மேற்குறிப்பிட்ட பணிக்கான கால அளவு 28.12.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

தற்போது, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 17.02.2023 பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.