காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் சேர மாா்ச் 12-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 12, 2023

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் சேர மாா்ச் 12-க்குள் விண்ணப்பிக்கலாம்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் சேர மாா்ச் 12-க்குள் விண்ணப்பிக்கலாம்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் இளநிலை ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சோ்வதற்கு மாா்ச் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பல்கலை. நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வரும் 13 இளநிலைப் படிப்புகளுக்கும் (3 ஆண்டு காலம்), 3 ஒருங்கிணைந்த இளம் அறிவியல் உடனான பட்டப் படிப்புகளுக்கும் (4 ஆண்டு காலம்), 2 ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் (5 ஆண்டு காலம்) 2023-24-ஆம் கல்வியாண்டு சோ்க்கை பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தோ்வு (க்யூட்) மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

இந்த பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள், என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளில் சோ்வதற்கான அடிப்படைத் தகுதிகள், இ- குறிப்பேடு (இ-வழிகாட்டுதல் கையேடு), மாணவா்கள் தாங்கள் தோ்வு செய்யும் துறைக்கு எந்தெந்தத் தாள்களை எழுத வேண்டும் போன்ற தகவல்களை என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இளநிலை, ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு 2023, மாா்ச் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.