பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் - DGE செய்திக்குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் - DGE செய்திக்குறிப்பு

10th Class General Examination- Science Subject Practice Test Individual Candidates Appear for Practice Test - DGE Press Release

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் - செய்தி வெளியிட கோருதல் தொடர்பு.

நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்வது குறித்த "செய்திக்குறிப்பு" இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இதனை அனைத்து தனித்தேர்வர்களும், பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது நாளேடுகளில் செய்தியாக வெளியிடுமாறும், தொலைக் காட்சியில் ஒலி/ஒளி பரப்பிடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது "விளம்பரம் அல்ல" எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத்

தேர்வில் தனித்தேர்வர்கள் கலந்து கொள்ளுதல் குறித்த செய்திக்குறிப்பு

ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, (Science Practical Examinations) 20.03.2023 முதல் 24.03.2023 வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது. ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்கள். மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுதிட அறிவிக்கப்படுகிறார்கள். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இவ்வறிவிக்கையை தெரிந்துகொண்டு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.