உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி - முதன்மைக் கருத்தாளர்களுக்கான (RP) அறிமுகப் பயிற்சி 27.01.2023 & 28.01.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 10, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி - முதன்மைக் கருத்தாளர்களுக்கான (RP) அறிமுகப் பயிற்சி 27.01.2023 & 28.01.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைபள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கருத்தாளர்களுக்கான அறிமுகப் (RP Orientation) பயிற்சியளித்தல் சார்பாக.

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி - முதன்மைக் கருத்தாளர்களுக்கான (RP) அறிமுகப் பயிற்சி 27.01.2023 & 28.01.2023 ஆகிய நாட்களில் மதுரையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்தலைமைப் பண்புப் பயிற்சியில் முதன்மை கருத்தாளராக செயல்படும் பொருட்டு இணைப்பு 1 -இல் காணும் தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்களுக்கான அறிமுகப் பயிற்சி (RP Orientation) 27.01.2023 மற்றும் 28.01.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இணைப்பு 2 -இல் காணும் தலைமையாசிரியர்கள் பயிற்சியாளர்களாக (Trainers) செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பில் குறிப்பிட்ட தலைமையாசிரியர்கள், மதுரை மாவட்ட நாகமலை புதுக்கோட்டை பில்லர் வளாகத்திலேயே தங்கி பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக, அவர்களை பணியிலிருந்து விடுவித்தும், பயிற்சிக்கு வரும் தலைமை ஆசிரியர்கள் பயிற்சி தொடங்கும் முந்திய தினம் இரவு 08.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு வந்து தங்களது பெயரினை பதிவு செய்யுமாறும், அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சிநடைபெறும் இடம் :

Pillar Campus, Pillar Salai, Nagamalai Pudukottai. Madurai Dt.

மேலும் பயிற்சி சார்ந்த விவரங்களுக்கு திருமதி.ஞா.ஏஞ்சலின் ரூபி, உதவிப் பேராசிரியை (7373005059) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6, என்பாரை தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.