பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - RBI எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 17, 2023

பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் - RBI எச்சரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் ஆர்பிஐ எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வந்தால், மாநிலங்களின் நிதி அதளபாதளத்திற்கு செல்லும் என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எச்சரித்துள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேச தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்தது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், ‘மாநில நிதிகள்: 2022-23 பட்ஜெட்களின் ஆய்வு’ என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதால், மாநில அரசுகளின் நிதி அதல பாதளத்திற்கு செல்லும் ஆபத்து உள்ளது. இந்த நடவடிக்கையால், தற்போதைய செலவினங்களை எதிர்காலத்திற்கு ஒத்திவைப்பதன் மூலம், வரவிருக்கும் ஆண்டுகளில் கடன் சுமை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல பொருளாதார நிபுணர்களும், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதால் மாநிலங்களின் நிதிநிலை கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.