வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு அரசு உதவிதக்தொகை - விண்ணப்பம் வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 6, 2023

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு அரசு உதவிதக்தொகை - விண்ணப்பம் வரவேற்பு

உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவிதக்தொகை வழங்குகிறது.

காலாண்டிற்கு 10ம் வகுப்பு தவறியவர்களுக்கு ரூ.600, தேர்சி பெற்றவர்களுக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 1200, பட்டம், முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 1800 வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளி மனுதாரர் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தால் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்திருந்தால் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 பத்து வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் மருத்தவம், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடைமருத்துவம் பயின்ற தொழில்கல்வி பட்டதாரிகள் தகுதியில்லாதவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதார்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டு இலவசாமாக பெற்று பயனடையுமாறு கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.