அரையாண்டு தேர்வு தேர்ச்சி ஆய்வில் அதிர்ச்சி - தமிழ், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் அதிக தோல்வி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 6, 2023

அரையாண்டு தேர்வு தேர்ச்சி ஆய்வில் அதிர்ச்சி - தமிழ், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் அதிக தோல்வி

தமிழ், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் அதிக தோல்வி அரையாண்டு தேர்வு தேர்ச்சி ஆய்வில் அதிர்ச்சி

பிளஸ்2 அரையாண்டு தேர்வில் தமிழ், பத்தாம் வகுப்பில் கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்தது தெரியவந்துஉள்ளது.

மாவட்ட அளவில் அரையாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் சந்திரகுமார்(பொறுப்பு), முத்துலட்சுமி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கந்தசாமி, பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இதில் ஒரு பாடத்தில்தோல்விகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பில் கணிதம்,சமூக அறிவியல், பிளஸ் 2வில் தமிழ் பாடங்களில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தோல்வியடைந்தது தெரிந்தது.

இதற்கு முதன்முறையாக முழு பாடங்களிலும் இருந்து தேர்வை சந்தித்தது, வினாத்தாள் முறையில் அதிக மதிப்பெண்களுக்கு நெடுவினாக்கள் இடம் பெற்றுஇருந்தது காரணமாக இருக்கலாம் தெரிவிக்கப்பட்டது.

சி.இ.ஓ., கார்த்திகா பேசுகையில், ஒருபாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தி அவர்களை தேர்ச்சியடைய வைக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு முன் திருப்புதல் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தி தேர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும்.

குறிப்பாக மொழிப்பாடங்களில் தோல்வியை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'எமிஸ்' பொதுத் தளத்தில் பள்ளி வாரியாக மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.