ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 26, 2023

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களின், மூன்று நாள் போராட்டம் 'வாபஸ்' பெறப்பட்டது.

தமிழகம் முழுதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறன் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு, 1,660 சிறப்பு பயிற்றுனர்ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கடந்த, 15 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் இவர்கள், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.

பணி நிரந்தம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், இம்மாதம், 23ம் தேதி முதல், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சங்க நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து, உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை வாபஸ் பெறப்பட்டது.

சிறப்பு பயிற்றுனர் ஆசிரியர்களுக்கு, முறைப்படி தற்காலிக பணி ஆணை வழங்கவும், ஊதிய உயர்வை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தரப்பில் உறுதி அளித்துள்ளதாக, சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.