ஆசிரியர் தேர்வு வினாத் தாள் கசிவு: குற்றவாளி வீடு தரைமட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 14, 2023

ஆசிரியர் தேர்வு வினாத் தாள் கசிவு: குற்றவாளி வீடு தரைமட்டம்

ஆசிரியர் தேர்வு வினாத் தாள் கசிவு: குற்றவாளி வீடு தரைமட்டம்

ராஜஸ்தானில் இரண்டாம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான வினாத் தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பூபேந்திர சரணின் வீட்டின் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பகுதிகள் இடிக்கப்பட்டது, 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் இரண்டாம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான வினாத் தாள் கசிவு விவகாரத்தில் 4 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான, அரசால் தேடப்பட்டு வரும் சரணின் வீட்டின் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதிகள் சட்ட நடைமுறைகளின்படி இடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்க பதிவில் பதிவிட்டுள்ளார். மாநில இளைஞர்களின் வருங்காலத்துடன் விளையாடும் தீய எண்ணம் கொண்ட நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை ராஜஸ்தான் அரசு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, முதல்வரின் உத்தரவை அடுத்து முக்கிய குற்றவாளியான பூபேந்திர சரணின் ஜெய்ப்பூரில் உள்ள வீட்டின் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதிகளை, பிறரது சொத்துகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அதிக கவனமுடன் ஜெய்ப்பூர் வளர்ச்சி கழகம் இடித்து தள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.