10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாறுகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 30, 2023

10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாறுகிறது

10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாறுகிறது 10th, Plus 1, Plus 2 students have changed the procedure exam date

10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.  அதுபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 10, 11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் School Education Department's plan to conduct preliminary examinations for class 10, 11, 12

10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 5ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 17ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக தகவல்

மார்ச் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த 10, 11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

பொது தேர்வுக்கும் செய்முறை பொதுதேர்வுக்கும் இடையே கால இடைவெளி குறைவாக இருப்பதால் சில நாட்கள் முன் கூட்டியே நடத்த திட்டம்

கிராமபுற மாணவர்கள் உரிய நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு செல்லும் வழி தடங்களை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும்

- அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.