அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 20, 2023

அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..

அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்.. - Opposition to Govt's Pension Reform Policy: Nationwide Protest Against Govt..

பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!


பிரான்ஸ்: பிரான்ஸில் அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு திட்டமிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பிரான்சில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 62-ஆக உள்ளது. இதனை 64-ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் முயற்சித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின் படி 2027-ம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பிரான்ஸ் முழுவதும் நேற்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பாரீஸ் நகரில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் நடனம் ஆடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டம் களம் போர்க்களமாக மாறியது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாண்வர்கள், அரசு பணியாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். நாடு முழுவதும் வெடித்தெழுந்த போராட்டத்தால் பிரான்ஸ் நாட்டிற்கு நேற்றைய தினம் கருப்பு வியாழனாகவே மாறியது. இதன் காரணமாக ஓய்வூதிய சீர்திருத்த கொள்கையை நிறுத்தி வைக்க அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.