அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் SSC தேர்வுக்கு இணையதள பயிற்சி வகுப்புகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 31, 2023

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் SSC தேர்வுக்கு இணையதள பயிற்சி வகுப்புகள்

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய MTS பணிக்கான இணையதள பயிற்சி வகுப்புகள் - Online coaching classes for SSC exam conducted by Anna Administrative Staff College


அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய MTS பணிக்கான இணையதள பயிற்சி வகுப்புகள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வு நாளை அண்மையில் அறிவுத்துள்ளது. ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் கலந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பலவிதமான தேர்வுகளில் கலந்து, வெற்றி பெற்று, மத்திய அரசுத் துறைகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள தனது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பான முறையில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தற்போது இந்தச் சீரிய முயற்சியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அது தனது AIM TN என்ற காணொலிப்பாதை (YouTube channel) மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர்களுக்காக நடத்திய போட்டித் தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A மெயின்ஸ் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து அதன் காணொலிப்பாதையில் பதிவேற்றம் செய்து வருகிறது. இம்முயற்சிக்கு மாணவர்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள MTS தேர்விற்கும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி காணொலி வகுப்புகளை நடத்தவுள்ளது. தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள், தமிழ்வழியில் மட்டுமே படித்து ஆங்கிலத்தில் தேர்வினை எதிர்கொள்ளத் தயக்கப்படும் மாணவர்கள், தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பணம் செலவிட்டுப் பயிற்சிபெற இயலாத இளைஞர்கள் போன்றோரும் இந்த MTS போட்டித் தேர்வில் போட்டி போட்டு.

வெற்றி பெற்று நடுவண் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்குடன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது ATM TN என்ற காணொலிப்பாதையில் (YouTube) பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்யவுள்ளது. தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.

MTS தேர்விற்கான பயிற்சி 1/2/2023 முதல் தொடங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.