2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 27, 2023

2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகைத் திட்டம்

Tuition Incentive Scheme for Adi Dravidian, Tribal and Christian Converted Adi Dravidian Students pursuing full-time Ph.D. from academic year 2021-2022 - 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகைத் திட்டம்

செய்தி வெளியீடு எண்: 171

செய்தி வெளியீடு

நாள்: 25.01.2023

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையிலும் விளிம்பு நிலை மக்கள் தங்கள் பொருளாதாரத்தில் முன்னேற கல்வியே சிறந்த உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கத்துடனும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கருக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சீரியமுறையில் செயல்படுத்தி வருகிறார். அதில், முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் (Ph.D) மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகைத் திட்டமும் ஒரு தலையாய திட்டமாகும். 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற குடும்ப வருமானம் ரூ.8.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தகுதி பெற்ற மாணவருக்கு தலா ரூ.1,00,000/- வீதம் 1600 மாணாக்கருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். 2022-2023 ஆம் ஆண்டும் இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10.02.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள், "இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005" என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.