ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டடம் கட்டுவதற்கு ரூ.44.50 கோடிஒப்பளிப்பு வழங்கி ஆணை - செய்தி வெளியீடு எண்: 183 - நாள்: 27.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 27, 2023

ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டடம் கட்டுவதற்கு ரூ.44.50 கோடிஒப்பளிப்பு வழங்கி ஆணை - செய்தி வெளியீடு எண்: 183 - நாள்: 27.01.2023

செய்தி வெளியீடு எண்: 183 நாள்: 27.01.2023 செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உருகொடுக்கம் வகையில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் 24.03.2022 அன்று நடைபெற்ற சட்ட மன்ற பேரவைக் கூட்டத் தொடரின் போது கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்..

"சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் சுமார் 75,000 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40.00 கோடி செலவில் கட்டப்படும்"

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் பொதுப்பணித்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ள மதிப்பீட்டறிக்கையின் அடிப்படையில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டடம் கட்டுவதற்கு ரூ.44.50 கோடி (ரூபாய் நாற்பத்து நான்கு கோடியே ஐம்பது இலட்சம் மட்டும்) பொதுப்பணித்துறையின்மூலம் கட்ட ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. (அரசாணை (நிலை) எண்.20, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந 2(1) துறை, நாள்.27.01.2023) இதன் மூலம் 484 கல்லூரி மாணவர்கள் பயன் அடைவர்.

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.