ஆசிரியர்களின் பி.எப்., தொகை ரூ.20.05 கோடியை பணத்தை காணோம்... இருக்கு... ஆனால் இல்லையென மாநகராட்சி மழுப்பல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 16, 2023

ஆசிரியர்களின் பி.எப்., தொகை ரூ.20.05 கோடியை பணத்தை காணோம்... இருக்கு... ஆனால் இல்லையென மாநகராட்சி மழுப்பல்

ஆசிரியர்களின் பி.எப்., தொகை ரூ.20.05 கோடியை பணத்தை காணோம்... இருக்கு... ஆனால் இல்லையென மாநகராட்சி மழுப்பல்

மாநகராட்சியில் 96 பள்ளிகளில் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 438 பேரிடம் 1.4.1990 முதல் 31.3.2019 வரை 29 ஆண்டுகளாக பி.எப்., தொகையாக ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 பிடித்தம் செய்துள்ளனர்.

இப்பணத்தை பிற அரசு துறைகள் போல் மாநில கணக்காயர் (ஏ.ஜி.,) அலுவலகம் பரிந்துரை செய்த எந்த வங்கியிலும் மாநகராட்சியால் இதுவரை செலுத்தப்படவில்லை. ஆனால் 1.4.2019க்கு பின் பிடித்தம் செய்த பி.எப்., தொகைக்கான ஆவணங்கள், வங்கியில் செலுத்தப்பட்ட விவரங்கள் உள்ளன.

இதுகுறித்து ஆசிரியர்கள் சங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இந்த தொகையை சிறப்பு நிதியாகவோ, மானியமாகவோ அல்லது கடனாகவோ வழங்க கோரி நகராட்சி நிர்வாக இயக்குநகரத்திற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொகை வந்தவுடன் மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்கிறோம்' என, பதில் அளித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசகன் கூறியதாவது:

சென்னை, மதுரை மாநகராட்சி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகையை மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரைத்த வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை 2019ல் கொண்டுவரப்பட்டது. சென்னை மாநகராட்சி இதை பின்பற்றியது. ஆனால் மதுரையிலோ உரிய முறையில் 'டெபாசிட்' செய்யவில்லை.

ஆசிரியர்கள் முன்பணம், கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர். அப்பணம் எங்கே உள்ளது என தெளிவுபடுத்த வேண்டும். வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் அதை ஈடுசெய்யும் வகையில் ஆசிரியர்களின் பணத்தை விரைவில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும், என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.