மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 17, 2022

மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வித்துறை, மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள அரையாண்டுத் தேர்வுகள் தொடர்பாக தலைமையாசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய அறிவுரைகள்

Nodal மையங்களிலிருந்து வினாத்தாட்களை உரிய நேரத்தில் எடுத்துச் சென்று, உரிய நேரத்தில் எந்த புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்

2. மந்தண முறையை கடைபிடித்து தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

3. அனைத்து மாணவர்களும் 100% தேர்வு எழுதுவதற்கு தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

4. விடைத்தாட்கள் உடனுக்குடன் மதிப்பீடு செய்யப்பட்டு (24122022-க்குள்) தே. ச்சி ஆய்வு படிவத்தினை சார்ந்த மாவட்டக் கல்வி அலு வலத்தில் ஓப் கப்பட வேண்டும்.

5. பாடம் வாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் ஒரு பாடத்தில் (Single Subject) தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடம் வாரியாக பெயர் பட்டியல் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

6. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை உதவி தலைமையாசிரியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட வேண்டும் ஆய்வு செய்யப்பட்ட விடைத்தாட்களை மாவட்டக்கல்வி அலுவலர்களால் மீளாய்வு செய்யப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.