பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் தனிநபர் கடன் உச்சவரம்பினை ரூ.12/- - இலட்சத்திலிருந்து ரூ.15/- இலட்சமாக உயர்த்தி ஆணையிடுதல் - தொடர்பாக. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 20, 2022

பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் தனிநபர் கடன் உச்சவரம்பினை ரூ.12/- - இலட்சத்திலிருந்து ரூ.15/- இலட்சமாக உயர்த்தி ஆணையிடுதல் - தொடர்பாக.

பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் தனிநபர் கடன் உச்சவரம்பினை ரூ.12/- - இலட்சத்திலிருந்து ரூ.15/- இலட்சமாக உயர்த்தி ஆணையிடுதல் - தொடர்பாக.

பார்வையில் காணும் கடிதத்தில் தமிழகத்திலுள்ள பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை ரூ.7/- இலட்சத்திலிருந்து ரூ.12/- இலட்சமாக உயர்த்தி வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

2. சில பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களாலும், சில மண்டல இணைப்பதிவாளர்களாலும், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர் சங்கங்களாலும், சில மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் முன்னேற்ற சங்கங்களாலும், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ரூ.12/- இலட்சத்திலிருந்து ரூ.15/- இலட்சமாக உயர்த்தி வழங்கிடக் கோரிக்கைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ரூ.12/- இலட்சத்திலிருந்து ரூ.15/- இலட்சமாக கீழ்கண்ட நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்த்தி வழங்கிட அனுமதிக்கப்படுகிறது.

1) கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்களுக்குட்பட்டு இருத்தல் வேண்டும். உறுப்பினர்களின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2) அதிகபட்சக் கடன் அளவு ரூ.15/- (பதினைந்து) இலட்சம் அல்லது உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்பட வேண்டும்.

3) வழங்கப்பட வேண்டிய கடன் தொகையில் பத்தில் ஒரு பங்கு (1/10) பங்குத் தொகையாக கடன் பெறும் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று வழங்கும் சங்கங்கள் 5% பங்குத்தொகை பதிவாளரின் சுற்றறிக்கை எண்1/2019 (ந.க.59115/2018/வஆ1) நாள்.03.01.2019-இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி வசூலிக்கப்பட வேண்டும்.

4) பணியாளர்களின் மொத்த ஊதியத்திலிருந்து அனைத்து பிடித்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பணியாளர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அவருடைய மொத்த ஊதியத்தில் 25%-க்குக் குறைவாக இருக்கக் கூடாது.

5) பணியாளர்கள் பணிபுரியும் அலுவலக சம்பளம் வழங்கும் அலுவலர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு கடன் தொகை அனுமதிக்கப்பட வேண்டும்.

6) பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட சரகத் துணைப்பதிவாளரிடம் தக்க துணை விதித்திருத்தங்கள் மேற்கொண்டு பதிவு செய்த பின்னரே புதிய உச்ச வரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும்.

3. மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை வழுவாமல் பின்பற்றி சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15/- இலட்சம் தனிநபர் கடன் உச்ச வரம்பினை உயர்த்தி வழங்குவதை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4. இக்கடிதத்தினைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகையை உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.