TNPSC - (தொகுதி-VI) பதவிக்கான தேர்விற்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 25, 2022

TNPSC - (தொகுதி-VI) பதவிக்கான தேர்விற்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு



தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான தேர்விற்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 20/2022, நாள் 08.08.2022-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி- VI) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு, 04.12.2022 முற்பகல் தாள்-I OMR முறையிலும் தாள்-II & தாள்-III கணினி வழித் தேர்வாகவும் 05.12.2022 முதல் 10.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் & 11.12.2022 முற்பகல் 07 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

PRESS RELEASE

Commission’s Notification No.20/2022 dated: 08.08.2022, for direct recruitment to the post of Forest Apprentice included in Tamil Nadu Forest Subordinate Service (Group-VI Services) for which Objective type examination, Paper –I (in OMR method) is scheduled to be held on 04.12.2022 FN and Paper –II & paper- III (CBT method) is scheduled to be held from 05.12.2022 to 10.12.2022 FN & AN and 11.12.2022 FN at 07 district centres.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examination has already been hosted on the Commission’s website www.tnpsc.gov.in and www.tnpscexams.in.

The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.