பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு EMIS அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - 12.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 30, 2022

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு EMIS அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - 12.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு EMIS அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - 12.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை 6 2022 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் - கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் தொடர்பாக.

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே செயல்முறைகள், நாள்:09.11.2022. எண்ணிட்ட பார்வை:

2022 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.11.2022 முதல் 30.11.2022 வரையிலான நாட்களில் EMIS தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பார்வையில் காணும் செயல்முறைகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

தற்போது சில பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பணியினை மேற்கொள்வதற்கு கூடுதல் காலஅவகாசம் கோரியதால் EMIS தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்யும் பணியினை மேற்கொள்ள 12.12.2022 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணிகளை EMIS தளத்தில் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாகும்.

எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து, EMIS தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளும் பணியினை 12122022-க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மேற்குறிப்பிட்டவாறு பதிவேற்றம் செய்த மாணவர்களின் விவரங்களின் அடிப்படையில் இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப்பட்டியல் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான தேதிகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.