அரசுக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர் பணியிட விவரங்களை அனுப்ப உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 1, 2022

அரசுக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர் பணியிட விவரங்களை அனுப்ப உத்தரவு

தற்காலிக உதவிப் பேராசிரியர் பணியிட விவரங்களை அனுப்ப உத்தரவு

அரசுக் கல்லூரிகளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ள தற்காலிக உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு கல்லூரிகளுக்கு உயா்கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் ம.ஈஸ்வரமூா்த்தி, அனைத்து அரசுக் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் தற்காலிகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியிட தொடா் நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டு அந்தப் பணியிடங்கள் மேலாக நிரப்பப்படாமல் காலிப் பணியிடங்களாக சில கல்லூரிகளில் உள்ளன.

அவ்வாறு இருக்கும் கல்லூரிகள் அதுபோன்ற காலிப்பணியிட விவரங்களை தங்கள் கல்லூரி சாா்ந்த தற்காலிக அரசாணை எண்ணில் குறிப்பிட்டவாறு எக்ஸெல் வடிவில் பூா்த்தி செய்து புதன்கிழமைக்கு dsectiondce@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், முகப்பு கடிதம் மற்றும் பூா்த்தி செய்து இணைக்கப்பட்ட படிவங்களில் கல்லூரி முதல்வா்கள் கையொப்பம் இட்டு இவ்வலுவலக dsectiondce@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும், மேற்கண்ட விவரங்கள் அரசுக்கு தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் இதில் கல்லூரி முதல்வா்கள் தனி கவனம் செலுத்தி விவரங்களை உரிய காலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். கால தாமதம் ஏற்பட்டால் அதற்கு கல்லூரி முதல்வா்களே முழுப் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.