மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 13, 2022

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை - 600 006

ந.க.எண்.24689/ அ4 / இ1 / 2019, நாள்.1) .11.2022.

பொருள்:

தமிழ்நாடு அமைச்சுப்பணி - மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்குதல் - தொடர்பாக. பார்வை:

1. அரசு ஆணை எண்.125 பள்ளிக் கல்வி (பக4(1))த் துறை நாள்.16.12.2020

2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

ந.க.எண்.24689/அ4/இ1/2019 நாள்.12.08.2022

பார்வை 1-இல் காணும் அரசு ஆணையின்படி எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் , மாணவர்களின் நிர்ணயிக்கப்பட்டு பார்வை 2-இல் காணும் ஆணையின்படி அனைத்து பள்ளிகளிலும் சீரான எண்ணிக்கையின் அடிப்படையில் பணியிடங்கள் நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியரல்லாத தற்போது பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட சில பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் பயிணிடங்களில் பணியாளர்கள் எவரும் இன்றி காலியாக உள்ளதாக இவ்வாணையரக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து. ஆசிரியரல்லாத பணியிடங்களில் (உதவியாளர் / இளநிலை உதவியாளர்) ஒரு பணியிடத்திலும் பணியாளர்கள் இன்றி காலியாக உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு, அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்களை வாரத்தில் இரண்டு நாட்கள் பணியாளர் பணிபுரியும் பள்ளியிலும், பணியிடங்கள் காலியாக உள்ள மேல்நிலைப் பள்ளியில் வாரத்தில் மூன்று நாட்கள் மாற்றுப் பணியில் பணிபுரிய உரிய ஆணைகளை உடன் வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்டுள்ளவாறு மாற்றுப்பணி வழங்கப்பட்ட பள்ளிகளின் விவரங்களை மாவட்ட அளவில் பட்டியலிட்டு 15.11.2022 ற்குள் இவ்வாணையரக அ4 பிரிவு மின்னஞ்சலுக்கு(Cosea4sec@gmail.com) அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.