பதவி உயர்விலும் TET கட்டாயம் : நீதிமன்றத் தீர்ப்பால் இதுவரை பதவி உயர்வு பெற்றவர்கள் - சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் என்ன? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 26, 2022

பதவி உயர்விலும் TET கட்டாயம் : நீதிமன்றத் தீர்ப்பால் இதுவரை பதவி உயர்வு பெற்றவர்கள் - சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் என்ன?

பதவி உயர்விலும் TET கட்டாயம் : நீதிமன்றத் தீர்ப்பால் இதுவரை பதவி உயர்வு பெற்றவர்கள் - சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் என்ன?

26/10/2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரை ஒன்றில், பதவி உயர்வில் TET தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க ஏதுவான அரசாணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது புதிய செய்தியாக தோன்றினாலும், கடந்த. 23/8/2010 அன்று வெளியான கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் இது தொடர்பான அரசாணை ஏற்கனவே அப்போதைய மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.

ஆசிரியர்கள் பணி நியமனம் RTE ACT அடிப்படையில் செய்கையில், TET கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பதே அது.

மேலும், அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களோ, அல்லது ஆசிரியர் அல்லாத பணியாளர்களோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்களாக நியமனம் பெறும் போது TET கட்டாயம் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

மேலும் 23/8/2010 க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக இருந்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு மூலம் பணி நியமனம் பெற்றவர்கள் TET கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதாவது 23/8/2010 க்கு பிறகு,

Non-Teaching to SGT : TET PAPER 1

Non- Teaching to BT : TET PAPER 2

SGT to BT : TET PAPER 2 என்ற நிலையில் தேர்ச்சி பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு என RTE Act கூறுகிறது.

ஆனால், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, TET- RTE புரிதல்கள் கல்வி அதிகாரிகளுக்கு இல்லாமல் இருந்தமையால் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில், பெரும்பாலான ஆசிரியர்கள் பதவி உயர்வில் TET இல்லாமல் இன்றும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆட்சியாளர்கள் இது தொடர்பாக தெளிவான அரசாணைகள் ஏதும் பிறப்பிக்கவும் இல்லை.

கடந்த 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் பணி நியமனங்கள் செய்யும்போதும், TET பற்றிய எந்தவொரு அறிவிப்பும் இன்றி பணி நியமனம் பெற்ற நிரந்தர பணியிட ஆசிரியர்களும் தொடர்ந்து தமிழக அரசிடம், TET லிருந்து முழுமையான விலக்கு வேண்டி அணுகி வரும் நிலையில், இந்த தீர்ப்பு தமிழக அரசிற்கு மேலும் சிக்கலான சூழலை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக இனி வரும் காலகட்டத்தில் மேலும் வழக்குகள் எதிர்கொள்ளாமலும், ஏற்கனவே உள்ள பணியிலுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்குகளும் நிறைவு பெற தமிழக அரசு சுமூகமான கொள்கை முடிவு எடுத்து, இதுவரை TET இல்லாமல் பதவி உயர்வில் இன்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கும், TET க்கு நிகரான புத்தாக்கப் பயிற்சியை வரும் அரையாண்டு விடுமுறையில் அளித்து, TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலும். மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் குடும்பங்களின் வீடுகளிலும் விடியல் கிடைக்கும்.

நன்றி.

பகிர்வு:

- கல்வியாளர்.

அர.திருவேங்கடம்.

தலைமை உறுப்பினர்,

பதவிஉயர்வு-பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.