MBBS, BDS இடங்கள்: 13 ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 30, 2022

MBBS, BDS இடங்கள்: 13 ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்: 13 ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வில் இடஒதுக்கீட்டு ஆணை பெற்ற 7,036 போ், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு 13 ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. நேரடியாக நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 65 இடங்களும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்களும் நிரம்பின. இடஒதுக்கீட்டு ஆணையை பெற்ற இவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பின்னா், கல்லூரிகளில் சோ்ந்து வருகின்றனா். இணையவழியில் நடைபெற்ற பொதுக் கலந்தாய்வில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 இடங்களும் நிரம்பின.

இந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், பொதுக் கலந்தாய்வில் தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளது. தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை, நீட் தோ்வு அனுமதி அட்டை, நீட் மதிப்பெண் அட்டை, 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (தகுதியானவா்கள் மட்டும்), தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் (தகுதியானவா்கள் மட்டும்), ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் (10) ஆகிய 13 ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்த பின்னா், இறுதி இடஒதுக்கீட்டு ஆணை பெறுபவா்களின் விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீட்டு ஆணை பெற்றவா்கள் நவ. 4-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும். அப்போது, சான்றிதழ்களின் அசல், நகல்களை கல்லூரிகளில் சமா்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.