ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - நாள் 31.10.22 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 31, 2022

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - நாள் 31.10.22

தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். சென்னை - 06. ந.க.எண்.5053/ டி1 /2022, நாள். 3.10.2022 பொருள்:

தொடக்கக் கல்வி - புதிய நியமனம் - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு - பணிவரன்முறை செய்வது - சார்பு.

பார்வை:

1. சென்னை-6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய கடிதம் ந.க.எண்.3285/ஆ2/2010, நாள். 30.03.2010

2. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.12300/டி1/ நாள்.20.08.2010

3. சென்னை – 6, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய கடிதம் எண்.6055/ஆ2/2010.நாள்.16.09.2011.19.09.2011மற்றும் 16.11.2011

4. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 1848/டி1/2010 நாள்.12.01.2012

5. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.19850 /சி5/இ2/2014, நாள். 11.2017

6. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.ந.க.எண்.23807/டி1/2019.நாள்.07.06.2019

7. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.ந.க.எண்.05856/டி1/2020, நாள்.29.01.2021

பார்வை-6இல் காணும் செயல்முறைகளின்படி 2008-2009ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் பெற்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை-7ல் காணும் செயல்முறைகளின்படி 2009-2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும், தற்காலிக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் நியமனங்களுக்கும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தனியே பணிவரன்முறை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை (5)-ல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகளில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இப்பொருள் குறித்து பரிசீலிக்கும் போது ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு எண் 04/2012 நாள் 07.03.2012 ல் கீழ்க்காணுமாறு உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

"Where an appropriate Government of local authority of a school has issued an advertisement to initiate the process of appointment of teachers prior to the date of this Notification such appointments may be made in accordance with the. NCTE (Determination of Minimum qualification for Recruitment of Teachers in Schools) Regulations, 2001 (as amended from time to time). Exemption to persons whose appointment process has been initiated prior to NCTE Notification dated 23.08.2010"

மேலும் Direct Recruitment of Tamil Nadu Teacher Eligibility Test 2012-TRB Notification dated 28.05.2012ல் கீழ்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

The following candidates are not required to write Teacher Eligibility Test.

a. All Appointment made prior to the date of Notification issued by the National Council of Teacher Education (NCTE) i.e., 23.08.2010.

b. Appointments made based on the advertisement issued before 23.08.2010 and appointment orders issued after 23.08.2010.

c. Appointments made based on the certificate Verification (CV) conducted before 23.08.2010 and appointment orders issued after 23.08.2010

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணை (நிலை)எண்:181, பள்ளிக்கல்வித்துறை. நாள்.15.11.2011 வெளியிடப்பட்ட பிறகு, பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களில் பணி நியமனத்துக்கான ஆசிரியர் தேர்வு வாரிய விளம்பரம் 23.08.2010-க்கு முன்னரே வெளியாகி இருப்பின் (Advertisement process initiated before 23.08.2010) அவர்கள் பொருட்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது."

எனவே, மேற்காண் செயல்முறைகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் சார்பில் பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதுமின்றி செயல்பட சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.