காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தலாமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 3, 2022

காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தலாமா?

காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தலாமா? - Can we open schools and conduct special classes during the quarterly exam holidays?

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு தேர்வுகள் நடத்தப்பட்டன.இதையடுத்து அக்.1ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்ட கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்" என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 comment:

  1. Actually for what purpose this news published... by goundamani comedy. Iyyam poosam maari yum irukkanum poosaatha maathiriyum irukkanum...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.