அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் பேட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 3, 2022

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் பேட்டி

மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னை, கிண்டியில் நடைபெற்ற மதிப்பீட்டாளர்கள் பயிலரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்மருவத்தூர் வழித்தடத்தில் மாணவர் பேருந்திலிருந்து கீழே விழுந்த சம்பவத்தில் 106 பெண்கள் ஒரே நேரத்தில் ஏறியதால் மாணவர்கள் படியில் பயணம் மேற்கொண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலாண் இயக்குநர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

போக்குவரத்து கழகத்தில் உள்ள ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். காலிப்பணியிடங்கள் நிரப்பும் முறை குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 75% பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக 97 பேர் மட்டுமே புகார் அளித்துள்ள நிலையில் அவர்களுக்கான பணம் திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 21000 பேருந்துகள் இருக்கிறது; பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் அரசு பேருந்துகளில் பொது மக்கள் பயணிக்க வேண்டும். அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.