நல்லாசிரியர் விருது தேர்வில் முறைகேடு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 4, 2022

நல்லாசிரியர் விருது தேர்வில் முறைகேடு?

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, தேசிய அளவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, மத்திய அரசு சார்பில், 46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு விருது கிடைத்துள்ளது.டில்லியில் விழாடில்லியில் இன்று நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.

விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் 393 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 10 பேரும்; 383 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகலில் நடக்கிறது.இதில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் மகேஷ் பங்கேற்று விருது வழங்கஉள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகள்

விருதுக்கான தேர்வு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.விருது பெறுவோரில் 25 பேருக்கு, மாநில தலைமை வழியாகவும்; மாவட்டத்தில் ஒருவருக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் வழியாகவும் அமைச்சர் பெயரை சொல்லி, சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கோவை மாவட்டத்தில், மாவட்ட கல்வி அதிகாரி பொறுப்பில் உள்ள ஒருவர், தான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பள்ளி ஆசிரியருக்கு விருதுக்கு சிபாரிசு செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னையில் மாவட்ட பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரின் பள்ளி தோழருக்கு, விருது சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.இதுதவிர, விருது பெறுவோரில் சிலருக்கு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை; போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதை, பள்ளிக்கல்வி துறை விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து, பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், பல்வேறு டிஜிட்டல் தளங்களில் பரப்பி வருகின்றனர்.கடந்த 2015ம் ஆண்டில் இருந்துநல்லாசிரியர் விருது தேர்வில், மாவட்டஅளவில் விதிமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்திலும் கடந்த ஆண்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு,விசாரணை கமிஷன் அமைத்து தீர்வு காண வேண்டும்.

ராஜ்குமார் தமிழக கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.