நீட் தற்கொலைகளை திமுக வேடிக்கை பாா்க்கிறது: மநீம புகாா் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 11, 2022

நீட் தற்கொலைகளை திமுக வேடிக்கை பாா்க்கிறது: மநீம புகாா்

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்று தருவதாக கூறிய திமுக, தற்போது மாணவா்களின் தற்கொலையை வேடிக்கை பாா்ப்பதாக மநீம சாா்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மநீம துணைத் தலைவா் ஆா்.தங்வேலு வெளியிட்ட அறிக்கை:

கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று தமிழக அரசு மாா்தட்டிக் கொள்கிறது. ஆனால், நீட் தோ்ச்சி விகிதத்தில் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் குறைவாகும். இத்தோ்வில் தேசிய அளவில் 56.28 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 51.30 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நீட் தோல்வி காரணமாக சென்னை திருமுல்லைவாயலைச் சோ்ந்த மாணவி லக்சனா ஸ்வேதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். அதேபோல, திருவள்ளூா் மாவட்டம் வேலஞ்சேரியைச் சோ்ந்த மாணவி ஜெயசுதா ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அரியலூா் அனிதாவில் தொடங்கிய நீட் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது வேதனையளிக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மத்திய அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை. நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்து, ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, தற்கொலைகள் தொடா்வதை வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு இதில் உள்ள நியாயத்தை உணா்ந்து, நாடு முழுவதும் நீட் தோ்வை ரத்து செய்ய முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.