அரசு பள்ளியில் 2 மகளையும் சேர்த்த ஆசிரியர் தம்பதிகள் - தனியார் பள்ளியில் சேர்க்க ஆகும் கட்டணத்தை பொருள் உதவியாக வழங்கி அசத்தல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 9, 2022

அரசு பள்ளியில் 2 மகளையும் சேர்த்த ஆசிரியர் தம்பதிகள் - தனியார் பள்ளியில் சேர்க்க ஆகும் கட்டணத்தை பொருள் உதவியாக வழங்கி அசத்தல்!

A government school teacher couple who have enrolled their 2nd daughter in a government school in Kudalur, have continuously donated 20,000 rupees worth of necessary materials to the school.

Krishnakumar is an Assistant Headmaster of Devala Government Higher Secondary School near Kudalur in Nilgiri District. His wife Revathi works as a teacher in a government primary school in Kudalur. Already in 2018, their eldest daughter, Nikarizhi, was enrolled in Panchayat Union Middle School in Vandipet, Kudalur. At that time, he gave materials worth 20000 rupees including seats for school students to sit and study.

In this situation, their second daughter Mahikhini has also been re-admitted to the same school. Today, they have enrolled their child in a government school and they have provided 2 water tanks, 30 seats for the students to sit and study, worth about 20000 rupees. They have also assured the headmaster that they will paint the school building.

Regarding this, teacher Krishnakumar said that government schools have developed at par with private schools. Students who can study in government schools are provided education and facilities similar to private schools by the government.

I have put my two daughters in government school because I want to be a role model. If I enroll my children in a private school, I will have to spend at least 20000 rupees annually. He said that he will use that money to buy things for the government school where my daughters can study.
கூடலூரில் தங்களது 2 வது மகளையும் அரசு பள்ளியில் சேர்த்த அரசு பள்ளி ஆசிரியர் தம்பதிகள், பள்ளிக்கு தேவையான 20,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் சீர்வரிசையாக வழங்கி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி ரேவதி கூடலூரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்களது மூத்த மகளான நிகரிழி யை கூடலூரில் உள்ள வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சேர்த்தனர். அச்சமயம் பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிக்க இருக்கைகள் உள்ளிட்ட 20000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.

இந்த நிலையில் இவர்களது இரண்டாவது மகளான மகிழினியையும் அதே பள்ளியில் மீண்டும் சேர்த்து இருக்கிறார்கள். இன்று தங்களது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்ததோடு, பள்ளிக்கு தேவையான 2 தண்ணீர் தொட்டிகள், மாணவர்கள் அமர்ந்து படிக்க 30 இருக்கைகள் என சுமார் 20000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கி இருக்கிறார்கள். அத்தோடு பள்ளி கட்டிடத்திற்கு வண்ணம் பூசி தருவதாகவும் தலைமை ஆசிரியரிடம் உறுதி அளித்திருக்கின்றனர்.

இது குறித்து ஆசிரியர் கிருஷ்ணகுமார் கூறுகையில், தற்சமயம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. அரசுப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகரான கல்வி மற்றும் வசதிகள் அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

தான் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் எனது இரண்டு மகள்களையும் அரசு பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். தனியார் பள்ளியில் எனது குழந்தைகளை சேர்த்து இருந்தால் ஆண்டுதோறும் குறைந்த பட்சம் 20000 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டி வரும். அந்தப் பணத்தை என் மகள்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளிக்கு பொருட்களாக வாங்கி கொடுக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.