அனுமதியில்லா உதவி பேராசிரியர் பணியிடம் - பல்கலைகளுக்கு உத்தரவு - Vacancy of Assistant Professor without permission - Order to Universities - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 24, 2022

அனுமதியில்லா உதவி பேராசிரியர் பணியிடம் - பல்கலைகளுக்கு உத்தரவு - Vacancy of Assistant Professor without permission - Order to Universities

Vacancy of Assistant Professor without permission - Order to Universities - அனுமதியில்லா உதவி பேராசிரியர் பணியிடம் - பல்கலைகளுக்கு உத்தரவு

அரசின் நிதிக்குழு ஒப்புதல் இன்றி, உதவி பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கிய அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பல்கலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு: தமிழக பல்கலைகளின், 41 உறுப்பு கல்லுாரிகளில் முதற்கட்டமாக, 14 கல்லுாரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டன. இவற்றில் உதவி பேராசிரியர் மற்றும் பணியாளர்கள் என, 793 பணியிடங்களுக்கு, மாதாந்திர செலவினம், 2.19 கோடி ரூபாய் என, 6.58 கோடி ரூபாய்க்கான, கல்லுாரி கல்வி இயக்குனரின் கடிதத்துக்கு, நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

கடந்த, 2019ல் அனுமதியின்றி கல்லுாரிகளில் துவங்கப்பட்ட, 76 பாடப்பிரிவுகளுக்கான, 280 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, நிதிச்சுமை காரணமாக, தற்போது அனுமதியில்லை; வரும் கல்வி ஆண்டில் பரிசீலிக்கப்படும். இவற்றில், நிதிக்குழுவின் ஒப்புதல் இன்றி பணியிடங்கள் உருவாக்கிய அதிகாரிகள், அலுவலர்கள் மீது, பல்கலை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும், அரசின் அனுமதியின்றி துவங்கப்பட்ட ஆசிரியரல்லா பணியிடங்களும், பல்கலைகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதை நிதிக்குழு ஒப்புதலின்றி உருவாக்கியிருந்தால், அதில் தொடர்புடைய அலுவலர்கள் மீதும் பல்கலைகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.