Part time Teachers age fixation - பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60ஆக நீட்டிப்பு செப்டம்பர் 2022 முதல் அமலுக்கு வருகிறது - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 26, 2022

Part time Teachers age fixation - பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60ஆக நீட்டிப்பு செப்டம்பர் 2022 முதல் அமலுக்கு வருகிறது - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60ஆக நீட்டிப்பு செப்டம்பர் 2022 முதல் அமலுக்கு வருகிறது - சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் - Part time Teachers age fixation - Extension of retirement age of part time teachers to 60 with effect from September 2022 - State Program Director of Integrated Schooling Processes

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை 6, மாநிலத் திட்ட இயக்ககம் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் - ஓய்வு பெறும் வயது 58 யிலிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வழங்குதல் - சார்பு.

பார்வை:

1. அரசாணை நிலை எண் 51, பணியாளர் மற்றும் நிர்வாகத் (S) துறை நாள் 07.05.2020

2. அரசாணை நிலை எண்.29 பணியாளர் மற்றும் நிர்வாகத் (S) துறை நாள் 25.02.2021

3. தமிழக அரசின் செய்தி குறிப்பு வெளியீட்டு எண் 1565 நாள் 10.09.2022

4. பல்வேறு சங்கங்களிலிருந்தும் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்ட மனுக்கள் பார்வை 1.60 அரசாணையில் அரசு காணும் முறையான பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது 59 வயது வரை எனவும், பார்வை 2-ல் காணும் அரசாணையில் முறையான அரசு பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது 60 வயது வரை எனவும் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

பார்வை 3ல் காணும் 10.09,2022 அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்தி குறிப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முதலாவதாக அனைத்து வகையான தற்காலிக பகுதி நேர பணியில் இருக்கும் சுமார் 16000 ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது."

இதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுநர்கள் (consolidated staff / special educators / part time instructors) உள்ளடக்கிய கல்வி மையங்களில் பணிபுரியும் பாதுகாவலர் (Caregiver மற்றும் உதவியாளர்கள் (Helper / ayah) -அனைவருக்கும் செப்டம்பர் 2022 முதல் ஒய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இது சம்பந்தமாக வட்டார வள மையங்களுக்கும் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கைகள்

மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.