தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்!' உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல் - Headmistress 'Suspend!' Prosecution Information in the High Court - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 24, 2022

தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்!' உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல் - Headmistress 'Suspend!' Prosecution Information in the High Court

தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்!' உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல் - Headmistress 'Suspend!' Prosecution Information in the High Court

'திண்டுக்கல் மாவட்டம், கணவாய்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட் ' செய்யப்பட்டுள்ளார்' என, தமிழக அரசுத் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

பொதுநல மனு

திண்டுக்கல், நத்தம் அருகே இ.வேலுார் ரேணுகாதேவி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கணவாய்ப்பட்டியில் நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தவர் அழகு. இவர் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்தார்.

இதை பெற்றோரிடம் தெரிவிக்கக்கூடாது எனக்கூறி, மாணவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்காத பெற்றோரின் குழந்தைகளை அடித்தார். தோட்டத்திலிருந்து இலவசமாக கீரைகள், காய்கறிகள் எடுத்து வருமாறும், பள்ளி நேரத்தில் வாழைப்பூ, கீரைகளை பிரித்துத் தருமாறும் மாணவர்களை கட்டாயப்படுத்தினார்.அவர் மீது நடவடிக்கை கோரி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகார் அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ஒத்திவைப்பு

மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், 'தலைமை ஆசிரியை அழகு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை, நீதிபதிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.