Director of Elementary Education administrative restructuring - நிர்வாக சீரமைப்பு காரணமாக வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 23, 2022

Director of Elementary Education administrative restructuring - நிர்வாக சீரமைப்பு காரணமாக வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள்-- தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்தல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Director of Elementary Education orders to transfer District Education Officer posts to required unions due to administrative restructuring

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் .சென்னை -06 நக.எண்.28688/ஐ1/2022, நாள்.)3.09.2022

பொருள்

- தொடக்கக் கல்வி - நிர்வாக சீரமைப்பு - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்தல் தொடர்பாக

பார்வை

அரசாணை (நிலை) எண்.151, பள்ளிக் கல்வித் (பக.1(1)) துறை , நாள்.09.09.2022 பார்வையில் கண்டுள்ள அரசாணையில் பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளவும், மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கும் பொருட்டும் பள்ளிக் கல்வி துறையில் உள்ள நிர்வாகத்தினை சீரமைத்து ஆணை வழங்கப்பட்டது.

தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றியங்களில் அனுமதிக்கப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மறுநிர்ணயம் செய்து மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டதில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 836 பணியிடங்களுடன் தேவைகளின் அடிப்படையில் புதியதாக 15 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அரசால் அனுமதிக்கப்பட்டு ஆணை பெறப்பட்டுள்ளது.

நிர்வாக சீரமைப்பின் காரணமாக பள்ளிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டதில் சில ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் தேவைக்கு அதிகமாகவும் சில ஒன்றியங்களில் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலான வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் தேவைப்படுவதாகவும் கண்டறியப்பட்டது. இவ்வாறு கண்டறியப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை மாற்றம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

மேலும், நிர்வாக சீரமைப்பு காரணமாக பள்ளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ஒன்றியங்கள் அருகாமையில் உள்ள ஒன்றியங்களுடன் நிர்வாக காரணங்களுக்காக இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்படும் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமைகள் அதே ஒன்றியத்தில் தனியாக பராமரிக்கப்படும்.

ஆசிரியர்கள் தன் விருப்பத்தின் பேரில் புதிய ஒன்றியத்திற்கு மாற விருப்பினால் அந்த இணைக்கப்படும் ஒன்றியத்தில் பணியில் இளையோராக கருதப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கலம் - 2 இல் உள்ள ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் கலம் - 3 இல் உள்ள ஒன்றியங்களுடன் இணைக்கப்படுகிறது.

பார்வையில் கண்டுள்ள அரசாணையில் புதியதாக 15 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உருது மொழி வழி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பார்வையிடுதல், ஆண்டாய்வு மேற்கொள்ளுதல், உருது பள்ளிகளுக்கு விடுமுறை பட்டியல் தயார் செய்து ஒப்புதல் அளித்தல், உருது மொழி வழிபள்ளி மாணாக்கர்களின் தேர்ச்சிபட்டியலுக்கு ஒப்புதல் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள 6 உருது வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை கீழ் கண்டவாறு சரகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பார்வையில் கண்டுள்ள அரசாணையில் வழங்கப்பட்டுள்ள 15 புதிய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் 6 உருது வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் போக மீதம் உள்ள 9 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் புதிய ஒன்றியங்கள் மற்றும் கூடுதல் தேவையுள்ள ஒன்றியங்களுக்கு கீழ் கண்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பெறுநர்

1 அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்

2 அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்

நகல்:

1அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச்செயலகம், சென்னை -09 ( தகவலுகாக பணிந்தனுப்பப்படுகிறது)

2 பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை -06 (தகவலுகாக பணிந்தனுப்பப்படுகிறது)

3. மாநில திட்ட இயக்குநர், ஒருகிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை 06 (தகவலுகாக பணிந்தனுப்பப்படுகிறது) CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.