மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 13, 2022

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

ஆண்டுதோறும் உயா்கல்வி பயின்று வரும் மாணவா்களுக்கு மத்திய அரசு சாா்பில் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (இநநந) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான உதவித் தொகை பெற அக். 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்கள், அரசு கலை-அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் உயா்கல்வித் துறை ‘Central Sector Scheme of Scholarship for College and University Students' என்ற திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது. இந்த உதவித்தொகை பெற மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தில் முழு நேர கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பகுதி நேர கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களோ அல்லது பட்டயப் படிக்கும் மாணவா்களோ விண்ணப்பிக்கக் கூடாது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பப் படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நிகழ் கல்வியாண்டில் (2022-2023) புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல், ஆதாரில் உள்ளது போல் பதிவிட வேண்டும். பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து வரும் அக். 31-ஆம் தேதிக்குள் http://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் இளநிலை பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் என 3 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம்; முதுநிலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் என இரு ஆண்டுகளுக்கு ரூ.40 ஆயிரம் கல்வி உதவியாக வழங்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.