அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!! - Kalviseithi Official

Latest

Friday, September 2, 2022

அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!!

அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!!

ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக ஜார்கண்ட் அமைச்சரவை செயலாளர் வந்தனா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இது குறித்து அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. முதல்வர் அறிவுறுத்தலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. இப்படி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்குங்க

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.