தாமதமாக பள்ளிக்கு வரும் மாணவர்களை வெளியே நிற்க வைக்கக்கூடாது... அமைச்சர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 23, 2022

தாமதமாக பள்ளிக்கு வரும் மாணவர்களை வெளியே நிற்க வைக்கக்கூடாது... அமைச்சர் உத்தரவு

நங்கநல்லூர் பகுதியில் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சிப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது பள்ளி மாணவர்கள் கேட்டிற்கு வெளியே நிற்பதைப் பார்த்தார். தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற அமைச்சர் 'தாமதமாக பள்ளிக்கு வந்தாலும் மாணவர்களை வெளியே நிற்க வைக்காமல் பள்ளிக்கு உள்ளே காத்திருக்க செய்யுமாறு' ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.பின் ஒவ்வொரு வகுப்பறையாக சென்ற அமைச்சர் மாணவர்களுக்கு அட்டென்ட்ஸ் எடுத்தார். மழலையர் வகுப்புகள் எப்படி செயல்படுகிறது என்றும் ஆய்வு மேற்கொண்டார். இறுதியில் சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்குத் துணி பைகளை அமைச்சர் வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.