MBA, MCA படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 31, 2022

MBA, MCA படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

MBA, MCA படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

கோவை, ஆக. 30: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூ ரிகளில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவ தற்கான கலந்தாய்வு கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி யது.

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல், கலைக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரி கள் ஆகியவற்றில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக ளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கின. ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை விண்ணப் பங்கள் பெறப்பட்டன.

எம்.சி.ஏ. படிப்புக்கு மொத்தம் 4,880 இடங்கள் உள்ள நிலை யில் 3,196 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.ஏ. படிப்புக்கு 12,719 இடங்கள் உள்ள நிலையில் 7,394 பேர் மட்டுமே விண் ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து தரவரிசைப் பட்டியல் கடந்த 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தடா கம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. எம்.பி.ஏ. படிப்புக்கு மொத்தம் 21 பேர் நேரடி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் 20 பேர் பங்கேற்றனர். அவர்களில் 19 பேர் தங்களுக்கான கல்லூரிக ளைத் தேர்வு செய்தனர்.

அதேபோல எம்.சி.ஏ. படிப்புக்கு மொத்தம் 12 பேர் அழைக் கப்பட்டிருந்த நிலையில் 11 பேர் பங்கேற்று தங்களுக்கான கல் லூரிகளைத் தேர்வு செய்தனர். கல்லூரிகளைத் தேர்வு செய்தவர் களுக்கு முதல்வர் தாமரை ஆணையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து எம்.சி.ஏ.வுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலும், எம்.பி.ஏ.வுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் நடைபெற உள்ளன.

இது இணைய வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதைத் தொடர்ந்து துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு நடைமுறைகள் செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் நி றைவடைகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.