பள்ளிகளை நடத்த அரசியல் கட்சிகளின் ஆலோசனை தேவையில்லை: முதல்வர் பதிலடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 11, 2022

பள்ளிகளை நடத்த அரசியல் கட்சிகளின் ஆலோசனை தேவையில்லை: முதல்வர் பதிலடி

பள்ளிகளை நடத்த ஆம் ஆத்மியின் ஆலோசனை தேவையில்லை: கோவா முதல்வர் பதிலடி

அரசு தொடக்கப் பள்ளிகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகளில் ஆலோசனையை விரும்பவில்லை என்று கோவா முதல்வர் ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கோவாவில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் தில்லி மாதிரியைப் பயன்படுத்துவோம் என்று ஆம் ஆத்மி கூறியதற்கு முதல்வர் சாவந்த் பதிலளித்துள்ளார்.

அரசு தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுக்க முன்வந்த ஆம் ஆத்மி முதலில் அவர்களின் சொந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் நிலையைச் சரிபார்க்க வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மற்ற பள்ளிகளுடன் இணைக்க அரசு முயற்சித்து வருகிறது என்றார்.

கோவாவில் அரசுப் பள்ளிகளை நடத்தும் திறன் கொண்டது. கடந்த 60 ஆண்டுகளாக அரசு தொடக்கப் பள்ளிகளை நடத்தி வருகிறது. 2012 முதல் 2022 வரை பாஜக அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. எங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை என்று சாவந்த் கூறினார்.

பள்ளிகளை நடத்துவதற்கு எந்த அரசியல் கட்சியும் பொறுப்பேற்கத் தேவையில்லை. பள்ளியை நடத்தும் அளவுக்கு அரசுக்குத் திறமை உள்ளது. மாணவர்களின் கல்வியில் எங்களுக்கு அக்கறை உள்ளது. கட்டடம் கட்டுவதில் எங்களுக்கு அக்கறை இல்லை, ஆனால் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் எங்களுக்கு கவலை உள்ளது.

புதிய கல்விக் கொள்ளை, கல்வித் தரம் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அரசியல் கட்சிகள் எதையாவது பெரியதாகச் செய்ய வேண்டும் என்று காட்டக்கூடாது. நாங்கள் பள்ளிகளை நடத்தும் திறன் கொண்டுள்ளோம்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட அனைவரையும் நாங்கள் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்வோம். அவர்கள் மனதில் பீதியை உருவாக்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.