அப்படி என்ன 'செய்திட்டாங்க... இப்படி பாராட்ட? அரசு ஊழியர்களை கொந்தளிக்கச் செய்த வாசகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 27, 2022

அப்படி என்ன 'செய்திட்டாங்க... இப்படி பாராட்ட? அரசு ஊழியர்களை கொந்தளிக்கச் செய்த வாசகம்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பது. தமிழக அரசு ஊழியர்கள் நீண்டகால கோரிக்கை. அதற் காக பல தொடர்ந்து வருகின்றனர். ஆண்டுகளாக போராடி

கடந்த ஆட்சியில் போராட்டங்கள்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த அதிமுக ஆட்சியில் அரசை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவுக்கு அரசு ஊழியர் பில் கள், ஆசிரியர் சங்கங்களின் கூட் டமைப்பான ஜாக்டோ - ஜியோ போராட்டங்களை நடத்தியது. அந்த போராட்டத்துக்கு அப்போ தைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஆதரவு தெரி வித்தார்.

தேர்தல் வாக்குறுதி

திமுக தனது தேர்தல் அறிக் கையில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்தது. பகுதிநேர ஆசி ரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவர். நிறுத்தப்பட்ட அக விலைப்படி வழங்கப்படும் என் பது உட்பட பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு எந்த வாக்குறுதியை யும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. ஏமாற்றிவிட்டது என்பது அரசு ஊழியர்களின் குற்றச்சாட்டு. ''இன்றைய நிதி நிலையில் பழைய பென்ஷன் திட்டத்துக்கு வாய்ப்பே இல்லை" என்று நிதியமைச்சர் தியாகராஜன் உறுதியாக தெரிவித் துவிட்டார்.

இந்நிலையில், தங்கள் கோரிக் கைகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல, முதல்வர் ஸ்டாலினை அழைத்து " கோரிக்கை விளக்க மாநாடு நடத்த திட்ட மிட்டது அரசு ஊழியர் கூட்ட மைப்பான ஜாக்டோ-ஜியோ. ஆனால், முதல்வர் தரப்போ இந்த தலைப்பில் கோரிக்கை நாடு விளக்க வேண்டாம். நன்றி அறிவிப்பு மாநாடாக நடத் தினால் வருவ தாக உறுதியளித் தது'. ஆனால், இந்த விஷயத்தில்

அரசு ஊழியர்களுக்கு இடையே மாறுபட்ட கருத்து எழ. நன்றி அறிவிப்பு என்ற பெயரை அவர் கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து சென்னையில் நடந்த ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில், 'வாழ் வாதார நம்பிக்கை மாநாடு' என்ற புது பெயரில், செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது.

இந்நிலையில், மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, ஜாக்டோ ஜியோ சார்பில் போஸ் டர் மற்றும் அழைப்பிதழ்கள் வடிவமைக்கும் பணிகள் தடந்து வருகின்றன. அதில் ஒன்றாக முதல் வர் போட்டோவு 'டன், 'நடந்தது எல் லாம் இனிதாக.. இனி நடக்கட்டும் எல்லாம் நலமாக" என்ற வாசகத்துடன் போஸ்டர் வடிவமைக் கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அரசு ஊழியர்கள். சங்க நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாச கத்துடன் போஸ்டர் தேவையா? என்று பல அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களை கொந்தளிக்கச் செய்த வாசகம்

இது குறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகி கள் சிலர் கூறுகையில், "கடந்த 15 மாதத்தில் இனிதாக நடந்தது என்று ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா? கேட்டதை தராத முதல்வருக்கு இது போன்ற ஒரு வரவேற்பு, பாராட்டு தேவையா?' என்று அரசு ஊழியர்கள். ஆசிரி யர்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இப்படி விளம் பரப்படுத்தி, முதல்வரை புகழ்ந்து மாநாடு நடத்தினால் சர்ச்சை ஏற் படும். பாதிக்கப்பட்ட அரசு ஊழி யர்களுக்கு இடையே மனஸ்தாப மும், வருத்தமும் ஏற்படும். பலர் மாநாட்டை புறக்கணிப்பார்கள். தேவையில்லாத இதை தவிர்க்க வேண்டும்"என்கிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.