CM Morning Breakfast Scheme - அரசு தொடக்கப் பள்ளிகளில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 27, 2022

CM Morning Breakfast Scheme - அரசு தொடக்கப் பள்ளிகளில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகள்

CM Morning Breakfast Scheme: முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள தமிழக அரசின் இலவச காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக செயல்படுத்திட 2022-2023 ஆம் ஆண்டிற்காக 33.56கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும்’ என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையில் 36 பள்ளிகளும் திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில் 20, கடலூரில் 15, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21, வேலூரில் 48, தூத்துக்குடியில் 8, மதுரையில் 26, சேலத்தில் 54, திண்டுக்கலில் 14, திருநெல்வேலியில் 22, ஈரோட்டில் 26, கன்னியாகுமரியில் 19, கோயம்புத்தூரில் 62 பள்ளிகளும் என மாநகராட்சிகளில் 381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.