தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங்கிற்கு எதிராக வழக்கு: அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 8, 2022

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங்கிற்கு எதிராக வழக்கு: அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

பதவி உயர்வு கவுன்சலிங்கிற்கு எதிரான வழக்கில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதனால், பொது மாறுதல் கவுன்சிலிங்கிற்காக காத்திருப்பவர்கள் பாதிப்பர். எனவே, பொது மாறுதல் கவுன்சலிங் நடத்திய பிறகே, பதவி உயர்வு கவுன்சலிங் நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஜி.சந்திரசேகர் விசாரித்தார். அரசு கூடுதல் பிளீடர் கண்ணன் ஆஜராகி, ‘‘பணி மாறுதலுக்கான கவுன்சலிங் கடந்த ஜனவரியிலும், பதவி உயர்வுக்கான கவுன்சலிங் மார்ச்சிலும் தான் நடந்தது. இதைத் தொடர்ந்தே பதவி உயர்வுக்கான கவுன்சலிங் தற்போது நடக்கிறது. ஒரு கவுன்சலிங்கில் பங்கேற்றவர்கள் அடுத்த ஓராண்டிற்குள் அடுத்த கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. பல மனுதாரர்கள் முந்தைய கவுன்சலிங்கில் பங்கேற்றுள்ளனர்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, அரசுத் தரப்பில் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் ெசய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

13.07.2022 அன்று நடைபெற உள்ள உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடையாணை - PDF

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.