புதிய பென்ஷன் ரத்து, அகவிலைப்படி நிலுவை - புதிய போராட்டத்திற்கு தயாராகும் அரசுப்பணியாளர்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 1, 2022

புதிய பென்ஷன் ரத்து, அகவிலைப்படி நிலுவை - புதிய போராட்டத்திற்கு தயாராகும் அரசுப்பணியாளர்கள்!

தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் புதிய பென்ஷன் ரத்து, அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டை கடந்தும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசுப் பணியாளர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கருதுகின்றனர். குறிப்பாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அகவிலைப்படி நிலுவை ஆகியவை முக்கியமானதாக கருதுகின்றனர். கடந்த முறை ஜெயலலிதாவும் தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து குறித்து கூறியே வெற்றி பெற்றார். அவர் காலத்திலும் திட்டம் ரத்தாகவில்லை. தற்போதைய தமிழக நிதியமைச்சர் தியாகராஜனும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமற்றது என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தார். இது அரசுப் பணியாளர் சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் அவ்வப்போது மாநில அளவில் கூடிபேசி வருகின்றனர். நாளை (ஜூலை 2) காலை 10:00 மணிக்கு மதுரையில் மாநில செயற்குழு கூட்டத்தை மாநில தலைவர் குமார் தலைமையில் கூட்டியுள்ளனர்.

மாவட்ட தலைவர் ஜெயகணேஷ் கூறுகையில், ''எங்களின் முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். புதிய அரசு பொறுப்பேற்று ஓராண்டை கடந்தும் எவ்வித பலனும் கிடைக்காததால் அடுத்த கட்டமாக தீவிர போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம்'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.