எப்படிக் கற்பார்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகள்? - இந்து தமிழ் கட்டுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 11, 2022

எப்படிக் கற்பார்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகள்? - இந்து தமிழ் கட்டுரை

புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே கல்வித் துறை ஆணைகளின் நகல்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களைப் பின்பற்றச்சொல்லி வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கையை எப்படி நடத்த வேண்டும், மாற்றுச் சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டும் என்பவை சார்ந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பணிகளை ஆசிரியர்கள் கவனமெடுத்துச் செய்துவருகின்றனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் 25% மாணவர் சேர்க்கை சரியாக நடைபெற்றுள்ளது. 'இல்லம் தேடிக் கல்வித் திட்டப் பணிகள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆகியவையும் சரியாள வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களுக்கு இணையவழியில் கட்டாயப் பயிற்சி, பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்புக் கூட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் என ஒரு மாத காலமாகக் கல்வித் துறையின் செயல்பாடுகளைப் பள்ளிகள் நிறைவேற்றிவருகின்றன. www.kalviseithiofficial.com ஆனால், கல்வித் துறை குழந்தைகளுக்கு அடிப்படையான பாடநூல்களை மட்டும் வழங்கிவிட்டு, எழுதுவதற்குத் தேவையான நோட்டுகளை இதுவரை வழங்கவில்லை. பாடம் நடத்த ஆரம்பித்து 20 நாட்களுக்கும் மேலாயிற்று. மற்ற விலையில்லாப் பொருட்களான சீருடை, பாடக் குறிப்பேடுகள், வடிவியல் கருவிப் பெட்டி ஆகியனவும் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். அவல நிலை

10ஆம் வகுப்பு படிக்கும் பிரவீனா என்கிற சிறுமிக்கு கணக்கு வகுப்பில் வரைபட நோட்டு இல்லை. “எங்க வீட்டில் நான்கு பெண் குழந்தைகள் மிஸ், எல்லாருக்கும் நோட்டு வாங்க எங்கப்பாகிட்ட காசில்ல" என்கிறாள். இதுவே உண்மை நிலை. ஆறாம் வகுப்பு படிக்கும் அன்புச்செல்வி ஏன் யூனிஃபார்ம் போட்டுட்டு வரவில்லை என்று கேட்டால், "எங்கப்பாக்கு சம்பளம் வரல மிஸ், வந்தா எடுத்துத் தரேன்னு எங்கம்மா சொன்னாங்க" என்கிறாள்.www.kalviseithiofficial.com அதேபோல பெற்றோர் இருவரையும் இழந்த கொண்டியம்மாள் விடுதியில் தங்கிப் படிக்கிறாள். "எனக்கு யாரும் இல்ல மிஸ், பாட்டிதாள் இருக்காங்க, எப்ப வருவாங்கன்னு தெரியாது. நோட்டும் இல்ல." என்கிறாள். இந்தக் குழந்தைகளுக்கு யார் உதவி, யார். எப்படி மேலே வரப்போகிறார்கள்?

ஜூலை 6 ஆம் தேதி வரையிலும்கூட கிராமம், நகரம் என எங்குமே அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படவில்லை. கரோனா காலம் முடிந்து, இயல்பான கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், அரசுப் பள்ளிக் குழந்தைகள் பாடங்களைப் படிப்பது எந்த வகையிலும் குறைக்கப்படப் போவதில்லை. அவர்களுக்கும் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு, தேர்ச்சி விழுக்காட்டின் நிலை குறித்த ஆய்வு என அனைத்தும் நடைபெறும். ஏன் பாடம் எழுதவில்லை? கட்டுரை எழுதவில்லை? கணக்கில் வரைபடம் (Graph) வரையவில்லை என்கிற கேள்விகள் கட்டாயம் வரும். ஆனால், அதற்கான கற்றல் சூழலோ நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். எப்படி முடியும்?

சில பாடநூல்களின் பொருளடக்கத்திலேயே ஒவ்வொரு மாதத்துக்கும் இத்தனை பாடங்கள் நடத்தப்பட வேண்டும் எனக் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் மளமளவென்று ஆகஸ்ட் மாதமும் வந்துவிடும்.

முதல் இடைப் பருவத் தேர்வும் வந்துவிடும். ஆனால், அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் பாடம் நடத்தப்பட்டாலும், எழுதுவதற்கு நோட்டு இல்லை என வகுப்பில் பாதிக் குழந்தைகள் எழுந்து நிற்கும் சூழலே நிலவுகிறது.www.kalviseithiofficial.com பெற்றோரால் வாங்கித் தர இயலாத சூழல். ஒரு நடுநிலைப் பள்ளி மாணவருக்கு அவசியமான நோட்டுகள் வாங்கக் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாய் தேவைப்படும்.

கல்வி ஆண்டு தொடங்கும் முன்னரே நிதி விடுவிக்கப்பட்டு, குறிப்பிட்ட தேவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, சரியான காலத்தில் சென்று சேர வேண்டியது அவசியமில்லையா ? மற்ற விஷயங்களில் கடுமை காட்டும் அதிகாரிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு உள்ளிட்டவற்றை இத்தனை நாட்களில் விநியோகித்திருக்க வேண்டாமா?

சு.உமாமகேஸ்வரி, சுல்விச் செயல்பாட்டாளர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.